இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியை விமர்சித்துள்ள ரமீஸ் ராஜா!
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி, ஒரு பல்கலைக்கழக அணிக்கும், பாடசாலை அணிக்கும் இடையிலான போட்டியை போன்று அமைந்திருந்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
இதில் இந்திய அணி பல்கலைக்கழக அணியைப்போன்று வலுவாக தோற்றமளித்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டுக்கு இது மிகவும் சவாலான சூழ்நிலை, ஏனெனில் அந்த அணி சொந்த மண்ணில் விளையாடுகிறது என்று ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சுழல் பந்து தாக்குதலுடன், போட்டியை நடத்தும் அணி, போராடுவதைக் கண்டு மிகுந்த ஏமாற்றமடைந்ததாக ரமீஸ் ராஜா குறிப்பிட்டுள்ளார். வரலாற்று ரீதியாக, இலங்கை துடுப்பாட்ட வீரர்கள், சுழற்பந்தில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
இருப்பினும், தற்போதைய அவர்கள் அந்த நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. இலங்கை வீரர்கள் ஒரு ஆரம்பத்தை பெற்ற பின்னர், குழப்பமாக இருந்தனர்.
வாகனத்தின் கியரை எவ்வாறு மாற்றுவது என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த குழப்பம் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சினால் ஏற்படுத்தப்பட்டது. விளையாட்டு ஒருதலைப்பட்சமாக இருந்தது.
எனவே எதிர்காலத்தில் போட்டியை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்குமா என்பது தெரியாது என்று ரமீஸ் ராஜா மேலும் தெரிவித்துள்ளார்.