வடமாகாணத்தில் உதவித்தொகை வழங்கல் தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்கள் - ஆளுநர் விளக்கம்

Jaffna Government Of Sri Lanka Weather
By Theepan Dec 07, 2025 12:26 PM GMT
Report

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்தொகை வழங்குவதில் எவ்விதமான முறைகேடுகளுக்கோ, பாரபட்சங்களுக்கோ அல்லது ஊழலுக்கோ இந்த அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது  ஊழலை முற்றாக ஒழித்து, நேர்மையான நிர்வாகத்தை நிலைநாட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கமாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைய நாட்களில் உதவித்தொகை வழங்கல் தொடர்பில் முன்வைக்கப்படும் பல்வேறு கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்திய ஆளுநர், இது குறித்து விசேட தெளிவுபடுத்தலை வெளியிட்டார்.அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தம்பதியினர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தம்பதியினர் கைது

ஜனநாயக கட்டமைப்பில் அரச செயற்பாடுகள் குறித்து கேள்வி

ஜனநாயகக் கட்டமைப்பில் அரச செயற்பாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுவதையும், விழிப்புடன் இருப்பதையும் நாம் வரவேற்கின்றோம். ஆனால், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு நிற்கும் மக்கள் மத்தியில், உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி குழப்பத்தை ஏற்படுத்துவதைத் தவிர்ப்பது சமூகப் பொறுப்புள்ள அனைவரதும் கடமையாகும்.

வடமாகாணத்தில் உதவித்தொகை வழங்கல் தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்கள் - ஆளுநர் விளக்கம் | Criticisms Regarding The Provision Of Scholarships

உதவித்தொகை வழங்கல் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருடன் விரிவாகக் கலந்துரையாடினேன். அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட சுற்றறிக்கைகளுக்கு அமையவே பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் கிராமமட்ட ஏனைய அலுவலர்கள் ஊடாகத் தெரிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதில் எவ்வித இரகசியத் தன்மையும் இல்லை. உதவித்தொகை பெறத் தகுதியானவர்களின் பெயர்ப்பட்டியல் அந்தந்தப் பகுதிகளில் பகிரங்கமாகத் காட்சிப்படுத்தப்படும். இதனை மாவட்டச் செயலாளரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மக்களுக்கான உதவித்தொகை 

எனவே, தகுதியான எவரும் விடுபடவோ, தகுதியற்ற எவரும் உள்நுழைவதற்கோ இதில் வாய்ப்புகள் இல்லை. மிக முக்கியமாக, மக்களுக்கான உதவித்தொகை இன்னமும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவில்லை.

அவ்வாறு பணம் வைப்பிலிடப்படும் முன்னரே, 'முறைகேடுகள் நடந்துவிட்டதாக' அரைகுறைத் தகவல்களைக் கொண்டு பரப்பப்படும் செய்திகள் அடிப்படையற்றவை. தெரிவுப் பட்டியல்கள் பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னரே கொடுப்பனவுகள் இடம்பெறும் என்பதால், பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்பி அச்சமடையத் தேவையில்லை.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசாங்கத்தின் பிரதான இலக்கு, அரச இயந்திரத்தில் புரையோடிப்போயிருந்த ஊழலை ஒழிப்பதேயாகும்.

வடமாகாணத்தில் உதவித்தொகை வழங்கல் தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்கள் - ஆளுநர் விளக்கம் | Criticisms Regarding The Provision Of Scholarships

கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை

எனவே, மக்களின் கண்ணீரில் இலாபம் தேடும் ஈனச் செயலுக்கோ அல்லது முறைகேடுகளுக்கோ இனி இடமில்லை. நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எந்தவொரு அதிகாரியாவது - அவர் எந்த நிலையிலிருந்தாலும் - தவறிழைத்தாலோ, ஊழலில் ஈடுபட்டாலோ அல்லது பாரபட்சம் காட்டினாலோ அவருக்கு எதிராகக் கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதில் எவ்வித சமரசமும் இல்லை.

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைக் கடந்து, முறைகேடுகள் தொடர்பில் யாரிடமேனும் தகுந்த ஆதாரங்கள் இருப்பின், அதனை எனது கவனத்துக்கு நேரடியாகக் கொண்டு வரலாம்.

ஆதாரபூர்வமான முறைப்பாடுகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். அரச இயந்திரம் மக்களுக்காகவே இயங்குகிறது.

இந்த இக்கட்டான நேரத்தில், காழ்ப்புணர்ச்சிகளைத் தவிர்த்து, நேர்மையுடனும் மனிதாபிமானத்துடனும் ஒன்றிணைந்து எமது மக்களை மீட்டெடுப்போம், என வடக்கு மாகாண ஆளுநர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நாளுக்கு நாள் உயர்வடையும் பலி எண்ணிக்கை! பலர் காணாமல்போயுள்ளதாக தகவல்

நாளுக்கு நாள் உயர்வடையும் பலி எண்ணிக்கை! பலர் காணாமல்போயுள்ளதாக தகவல்

தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களத்தின் அவசர வேண்டுகோள்

தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களத்தின் அவசர வேண்டுகோள்

10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US