அமெரிக்காவிலிருந்து தனி ஜெட் விமானத்தில் அவசரமாக வெளியேறிய ரொனால்டோ
ஈரானிய ட்ரோன்களால் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதை அடுத்து, கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனியார் ஜெட் விமானத்தில் சவுதி அரேபியாவிலிருந்து ஸ்பெயின் தலைநகரமான மாட்ரிட்க்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது.
அவசரமாக வெளியேறும் பிரபலங்கள்
இந்நிலையில், சவுதி அரேபியாவின் அல்-நசார் அணியில் விளையாடி வரும் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு,தனது குடும்பத்தினருடன் சொந்த விமானத்தில் சவுதியிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறியுள்ளார்.

இவர் பயணித்த தனி விமானம் போர் பதற்றத்திற்கு மத்தியில் சுமார் ஏழு மணி நேரம் பயணம் மேற்கொண்டு ஸ்பெயின் தலைநகரில் தரையிறங்கியுள்ளது.
ரொனால்டோவின் ஜெட் விமானம் எகிப்து மற்றும் மத்திய தரைக்கடல் வழியாகச் சென்று இலக்கை அடைந்ததை வரைபடங்கள் காட்டியுள்ளன.
போர் பதற்றம்
மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் பல அமெரிக்க குடிமக்கள், தற்போதைய பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக, இப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பல பிரபலங்கள் பயங்கரமான தாக்குதல்களில் சிக்கிக்கொண்டுள்ளதாகவும், சிலர் அவசர அவசரமாக வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam