பிணவறைகளில் இடநெருக்கடி! மரணத்தை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரிக்கை
பிணவறைகளில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடியை தடுக்க மரணங்களை குறைத்துக்கொள்வது சிறந்தது என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான தாதி பயிற்சி அதிகாரி புஷ்பா ரம்யன்னி டி செய்சா தெரிவித்துள்ளார்.
இதனிடையே தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டு பிணவறைகளில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி காரணமாக உங்கள் மரணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள் என அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,கொழும்பு பொலிஸ் பிணவறையில் கோவிட் சடலங்கள் நிறைந்துள்ளதால், தற்காலிக குளிர்சாதனப் பெட்டிகளில் பிணங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
பொலிஸ் பிணவறையில் தற்போது 25 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அத்துடன் நாடு முழுவதில் உள்ள சில வைத்தியசாலைகளின் பிணவறைகள் கொள்ளவை தாண்டியுள்ளதாக அந்த வைத்தியசாலைகளில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



