ரஷ்யாவால் பிரித்தானியவிற்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி
ரஷ்யாவால் புதிய நெருக்கடி ஒன்றை சந்திக்கும் நிலை பிரித்தானியாவிற்கு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் பெரிய வங்கிகள் அனைத்தும் ரஷ்ய சைபர் தாக்குதலுக்கு எதிராக அவர்களின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், ஒரு வங்கியின் இணைய பக்கம் தாக்குதலுக்கு இலக்கானாலும், வாடிக்கையாளர்கள் இன்னொரு வங்கியின் பக்கத்தில் தங்கள் கணக்கை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
மேற்கத்திய நாடுகளின் தடைகள்

திறந்த வங்கி தொழில்நுட்பம் என கூறப்படும் இதில், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் சில ஒப்புக்கொள்ளப்பட்ட விவரங்களை பகிர்ந்துக்கொள்ள அனுமதிக்கிறது.
மேலும், மேற்கத்திய நாடுகளின் தடைகளை முறியடிக்க, அவர்களை பழிவாங்கும் நோக்கில் ரஷ்யா வங்கிகளை குறிவைக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இதன் உண்மைத்தன்மை தொடர்பில் இதுவரை அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்யப்படவில்லை.
மாறாக, ரஷ்ய தரப்பில் இருந்து சமீப நாட்களில் அணு ஆயுத பயன்பாடு மற்றும் சைபர் தாக்குதல் தொடர்பில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
சைபர் தாக்குதல்

இதனாலையே, வர்த்தக வட்டாரங்களில் சைபர் தாக்குதல் தொடர்பிலான அச்சம் காணப்படுவதாக கூறுகின்றனர்.
இதேவேளை சைபர் தாக்குதல் விவகாரத்தில் ரஷ்யா பலம் பொருந்திய நாடு என கூறும் அதிகாரிகள், தங்கள் தரப்பில் இருந்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
இந்த ஆண்டு துவக்கத்தில் இரண்டு உக்ரைன் வங்கிகள் மீது ரஷ்யா சைபர் தாக்குதல் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam