இலங்கையில் டொலருக்கு கடும் நெருக்கடி! - அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
இலங்கையின் டொலருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் இன்று இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில், இறக்குமதி செலவை ஈடுசெய்தல் மற்றும் கடன் செலுத்தல் என்பன நெருக்கடி நிலையில் உள்ளன.
இந்நிலையில், வெளிநாட்டு நாணய கையிருப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெறுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவது பொருத்தமானது என தான் நம்புவதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்துடன் பேசி முன்னேற வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன்” என அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 18 மணி நேரம் முன்

அமெரிக்க - சீனா வர்த்தக ஒப்பந்தம்... முகேஷ் அம்பானியை விட மூன்று மடங்கு சம்பாதித்த நபர் News Lankasri

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
