இந்தியாவிலிருந்து இலங்கைக்கு படையெடுக்கும் கிரிம்சன் ரோஸ்
இந்தியாவின் - இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான 'கிரிம்சன் ரோஸ்' (Crimson Rose) வண்ணத்துப்பூச்சிகள் இலங்கைக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.
குறித்த வகையான வண்ணத்துப்பூச்சிகள் காலநிலை மாற்றம் மற்றும் உணவு தேவைக்காக வடகிழக்குப் பருவ பெயர்ச்சி மழைக்கு முன்னர், மலைப்பகுதிகள் நோக்கி இடம்பெயரும் ஆற்றல் கொண்டுள்ளதாக, த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
நீண்ட தூரம் பயணிக்கும் இயல்புடைய குறித்த வகை வண்ணத்துப்பூச்சிகள் நேற்றுமுன்தினம் முதல் இவ்வாறு இடம்பெயர்வது அவதானிக்கப்பட்டுள்ளது.
கடல் வழியாக இலங்கை வருவதற்கு முன்னதாக இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியின் கரையோரங்களில் உள்ள மலர்களில் தேன் அருந்தி விட்டு பயணிப்பதாக இந்திய இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னரும், இந்த வகையான வண்ணத்துப்பூச்சிகள் இலங்கைக்கு இடம்பெயர்ந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 23 மணி நேரம் முன்

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
