மட்டக்களப்பில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற குற்றச்செயல்கள்!
மட்டக்களப்பில் இருவேறு பகுதிகளில் இரண்டு குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மட்டக்களப்பில் வலுவிழந்த சிறுவர் இல்லத்தின் போலி பற்றுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து அனுப்பபட்ட 16 இலச்சத்து 75 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள (ஓசானம்)வலுவிழந்த சிறுவர் இல்லம் ஒன்றிற்கு வெளிநாடுகளில் இருந்து அன்பளிப்பாக வழங்கப்பட்ட 16 இலச்சத்து 75 ஆயிரம் ரூபாவை போலி பற்றுச் சீட்டு மூலம் மோசடி செய்த குற்றச்சாட்டில் அங்கு கடமையாற்றி வந்த தன்னாமுனையைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரை நேற்று (13.11.2022) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.
சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞன்
மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 21 வயது இளைஞனுக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு நகரில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட கூளாவடி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவரை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று முன்தினம் (12.11.2022) மட்டக்களப்பு நீதவான் நீதின்ற பதில் நீதவான் உத்தரவிட்டார்.
இதற்கமைய, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் குறித்த இளைஞனை நேற்று சனிக்கிழமை கைதுசெய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
