திருகோணமலையில் மோதல்: குடும்ப பெண்ணின் கை துண்டிப்பு
திருகோணமலை - கோணேஷபுரி பகுதியில்தாயும்,மகளும் வாள்வெட்டுக்கு இலக்கான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று (01.04.2023) மாலை இடம்பெற்றுள்ள நிலையில் தாயும்,மகளும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் பெண்ணொருவரின் கை துண்டிக்கப்பட்ட நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் அவசர சத்திர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்கான பெண் நிலாவெளி -கோணேஷபுரி SLRC வீட்டு திட்டத்தில் வசித்து வரும் 50 வயதுடைய பெண் எனவும் தெரியவருகின்றது.
தடுக்க சென்ற மீதும் தாக்குதல்
இதேவேளை பெண்ணின் 30 வயதுடைய மகள் தாயை வாளால் வெட்ட முற்பட்டபோது தடுக்க சென்றமையினால் காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் தாயின் துண்டிக்கப்பட்ட கையை பொருத்துவதற்காக அவசர அம்பியூலன்ஸ்
மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
வாள்வெட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள
நிலையில் சம்பவம் குறித்த தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri
