திருமண யோசனையை முன்வைத்து 3 பிள்ளைகளின் தாயார் எடுத்த தவறான முடிவு
பொலிஸ் அதிகாரி ஒருவரின் மனைவியான 3 பிள்ளைகளின் தாயார் தனது கணவனின் நண்பனான மற்றுமொரு பொலிஸ் அதிகாரியை, தன்னை திருமணம் முடிக்குமாறு கோரி பொலிஸ் நிலையத்தில் தனது கழுத்தை பிளோற்றால் அறுத்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பெண்ணின் தவறான முடிவு
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பொலிஸ் அதிகாரி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றி வந்தபோது அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் அதிகாரியுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அவருடன் மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று வந்த நிலையில் அவரது 38 வயதுடைய மனைவியுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.
நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட நட்பு இருவருக்கும் இடையே காதல் ஏற்படடுள்ள நிலையில் பொலிஸ் அதிகாரி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்று அங்கு கடமையாற்றி வந்துள்ள நிலையில் அங்கு காதலனை தேடிச்சென்று சென்று தன்னை திருமணம் முடிக்குமாறு கோரியுள்ள நிலையில் அதற்கு பொலிஸ் அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் காதலனை தேடி அடிக்கடி பொலிஸ் நிலையத்துக்கு சென்று திருமணம் முடிக்குமாறு தொடர்சியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
நேற்று இரவு 7 மணியளவில் குறித்த பெண் பொலிஸ் நிலையத்துக்கு சென்று பொலிஸ் அதிகாரியை தொந்தரவு கொடுத்த நிலையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இருவரையும் அழைத்து விசாரித்துவிட்டு வெளியே செல்லுமாறு தெரிவித்ததையடுத்து அங்கிருந்து இருவரும் வெளியே வந்தபோது திடீரென குறித்த பெண் தான் கொண்டுவந்த பிளோற்றினால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயற்சிதுள்ளார்.
பொலிஸார் விசாரணை
படுகாயமடைந்ததையடுத்து அவரை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
செய்தி: பவன்
May you like this Video
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 18 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri