நடுவீதியில் நடந்த கத்தி குத்து சம்பவம்! அதிர்ச்சியளிக்கும் சிசிரிவி காட்சிகள்
டோர்ச் ஒளியை, ஒளிரச் செய்தார் என சந்தேகப்பட்டு, ஒருவர் மீது கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று பொகவந்தலாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய பொகவந்தலாவை நகர மையத்தில் நேற்று ஒருவரை கத்தியால் குத்தி காயப்படுத்திய சந்தேகநபரை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, டபிள்யூ.ஆர்.ஏ.டி. சுகததாச தெரிவித்துள்ளார்.
கத்தி குத்து சம்பவம்
தாக்குதலில் காயமடைந்தவர் கெசல்கமுவ ஓயா வனப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபடும் போது, அந்த திசையில் டோர்ச் ஒளியை ஒருவர் ஒளிரச் செய்துள்ளார்.
இதனால் அனுமதியின்றி மாணிக்கக்கல் தோண்டும் இடத்தை நோக்கியே அந்த நபர், மின்விளக்கை ஒளிரச் செய்துள்ளதாக கோபமடைந்த சந்தேகநபர், பொகவந்தலாவை நகர மத்தியில் வைத்து, அந்த நபரை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.
குறித்த நபரை கத்தியால் குத்தி காயப்படுத்திவிட்டு, சந்தேகநபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விசாரணை
இந்நிலையில், அவரை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பிலான சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
தாக்குதலில் காயமடைந்த நபர் பலத்த காயங்களுடன் டிக்கோயா-கிளங்கன் ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் பொகவந்தலாவை பொலிஸார் தாக்குதல் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
