விசேட அதிரடிப்படையினரால் உயிர் தப்பிய நபர்!
மஹரகம பொதுச் சந்தைக்கு முன்பாக சந்தேகநபர் ஒருவர் மற்றுமொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
இதன்போது கத்திக்குத்து இலக்கான நபர், களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹரகம நகரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவரை கொலை செய்ய முயன்றவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
விசாரணை
சந்தேகநபர் மற்றுமொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதையடுத்து, விசேட அதிரடிப்படை அதிகாரிகள் பெரும் பிரயத்தனப்பட்டு அவரை கைது செய்துள்ளனர்.

இதேவேளை சந்தேகநபரிடம் இருந்து சில போதை மாத்திரைகள் மற்றும் கூரிய ஆயுதம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அவர் மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri