கொலைக் குற்றச்சாட்டில் அரசியல் கட்சியின் தமிழ் பேசும் உறுப்பினர் ஒருவர் கைது
நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த தன்னார்வ நிவாரணப் பணியாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சர்வஜன அதிகாரம் கட்சியின் அல்ஹிலால்புர பிரிவைச் சேர்ந்த முஹம்மது காசிம் அப்துல் சமத் என்பவர் லங்காபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் உண்மை கதை
லங்காபுர பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திலித் ஜெயவீரவின் தலைமையில் உருவாக்கப்பட்ட சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினரே கைது செய்யப்பட்டவராவார்.
தம்பல, அல்ஹிலால்புர, கல்வாலா சாலை, 116 இல் வசிக்கும் இந்த உறுப்பினர், பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொதிகளை விநியோகிக்க வந்திருந்தார்.

கிராம சேவையாளர்களின் தலையீட்டால் அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான பட்டியலை அகற்றி, அவருக்கு நெருக்கமானவர்களின் பெயர்களைப் பதிவு செய்து நிவாரணப் பைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.
இது தொடர்பாக மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் இந்த நடவடிக்கைக்கு எதிராக குரலெழுப்பிய ஒரு இளைஞரை சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினர் தாக்கியுள்ளார்.
இளைஞனின் நான்கு பற்களும் உடைந்த நிலையை மோதலைத் தடுக்க முற்பட்ட நிவாரணப் பணியில் ஈடுபட்ட ஒரு தன்னார்வலர்,குறித்த உறுப்பினரால் தாக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
வீட்டில் ஆயிரம் பிரச்சனை, ஆனால் ரொமான்ஸ் Moodல் கதிர்- ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரொமான்டிக் புரொமோ Cineulagam
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam