ஹெரோயின் போதைபொருளை வைத்திருந்த ஒருவர் கைது
திருகோணமலை - தம்பலாகாமம் பகுதியில் மூன்று கிராம் ஹெரோயின் போதைபொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபரொருவர் நேற்று(29) கைது செய்யப்பட்டுள்ளார்.
முள்ளிப்பொத்தானை பகுதியை சேர்ந்த 35 வயதுடையரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
சந்தேகநபர் சூட்சமமான முறையில் ஹெரோயின் போதை பொருளை விற்பனை செய்து வருவதாக தம்பலாகாமம் போதைபொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்க கைது நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் வாசஸ்தலத்தில் இன்று(30) முன்னிலைபடுத்தியுள்ளனர்.
இதன்போது குறித்த நபரை அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.