கிரிக்கட்டில் அரிய நிகழ்வு! வேகமாக பரவும் காணொளி! (video)
நியூசிலாந்து கிரிக்கட் வீரர் ஹென்ரி நிகோல்ஸ் ஆட்டமிழந்த காணொளி தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.
இந்த நிலையில் லீட்சில் நேற்று ஆரம்பமான இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 225 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதன்போது இங்கிலாந்து அணியின் ஜெக் லீச் வீசிய பந்தை ஹென்ரி நிக்கோல்ஸ் அடித்தார். அந்த பந்து எதிர்முனையில் இருந்த டேரில் மிட்செல்ஸை நோக்கி சென்றது.
அவர் தமது தற்பாதுகாப்பு கருதி, அந்த பந்து தன் மீது படாமல் இருக்க விலகியபோதும், பந்து அவரின் துடுப்பில் பட்டு மேழெழும்பியது.
அத்துடன் அந்த பந்து நேராக மிட் ஓப்பில் இருந்த களத்தடுப்பாளர், அலெக்ஸ் லீஸ்க்கு சென்றது. அவர் அந்த பந்தை பிடியெடுத்தார்.
இதனால் ஹென்ரி நிக்கோலஸ் 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனையடுத்து சொந்த அணி வீரரால் எதிர்பாராத விதமாக ஹென்ரி நிகோல்ஸ் ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
What on earth!? ??
— England Cricket (@englandcricket) June 23, 2022
Scorecard/clips: https://t.co/AIVHwaRwQv
??????? #ENGvNZ ?? pic.twitter.com/yb41LrnDr9