யாழில் சமிந்த வாஸ் தலைமையிலான கிரிக்கெட் பயிற்சி முகாம்
இலங்கை அணியின் முன்னாள் பிரபல பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையிலான குழுவினரால் யாழ்ப்பாணத்தில் துடுப்பாட்ட பயிற்சி முகாம் நடாத்தப்படவுள்ளதாக ஜெப்னா ஸ்ரான்லியன்ஸ் (Jaffna stallions) இயக்குனர் க. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் க. ஸ்ரீதரன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
துடுப்பாட்டத்தில் திறமையானவர்களை கண்டறிவதற்கான பயிற்சி முகாம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(06.10.2023) மற்றும் சனிக்கிழமைகளில்(07.10.2023) நடைபெறவுள்ளது.

அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை(08.10.2023) வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி முகாமில் சமிந்த வாஸ் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்படவுள்ளதோடு சிறந்த வீர வீராங்கனைகளை தெரிவு செய்யப்படுவார்கள்.
13 வயதில் இருந்து 25 வயது வரையிலான வீர வீராங்கனைகள் இந்த பயிற்சியில் பங்கேற்க முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கேற்க விரும்புவோர் 077 801 3310 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக பதிவுகளை மேற்கொள்ள முடியும். அல்லது பின்வரும் இணைப்பின் Link மூலம் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
திறமையை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு
இதேவேளை நாம் துடுப்பாட்ட அக்கடமி ஒன்றினை, யாழ்ப்பாணத்தில் நிறுவி வருகின்றோம். அது தற்போது நிறைவுறும் தருவாயில் உள்ளது.
அதில் துடுப்பாட்டம் தொடர்பில் விசேட பயிற்சிகளை வழங்கி திறமையான வீரர்களை உருவாக்க உள்ளோம். அதற்கான வீரர்களை தேர்ந்து எடுப்பதற்கான முதல் தேர்வே இந்த பயிற்சி முகமாகும். இதில் பாடசாலை மாணவர்கள், கழகங்கள், மாவட்ட துடுப்பாட்ட சங்க வீரர்கள் என பங்கேற்க முடியும்.
இதில் 100 தொடக்கம் 150 பேர் வரையில் தேர்வு செய்யவுள்ளோம். தேர்வு செய்யப்படப்படும் வீர வீராங்கனைகள் எம்மால் நிர்மாணிக்கப்படும் துடுப்பாட்ட அக்கடமியில் மேலும் பயிற்சிகளை பெற்றுக்கொள்ள முடியும்.
அதன் ஊடாக அவர்கள் தமது திறமையை வளர்த்து கொள்வதன் ஊடாக வடக்கில் சிறந்த துடுப்பாட்ட வீர வீராங்கனைகள் உருவாகுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
எம்மால் உருவாக்கப்படும் வீர வீராங்கனைகளை வெளிநாட்டு கழகங்கள் , சுற்றுப்போட்டிகள் என்பவற்றில் பங்கேற்க முடிந்தவரையில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுப்போம் என தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam