இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அக்சு பெர்னாண்டோ காலமானார்
19 வயதுக்குட்பட்ட இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அக்சு பெர்னாண்டோ இன்று (டிசம்பர் 30) காலமானார்.
கல்கிஸை கடற்கரைக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற தொடருந்து கடவையில் டிசம்பர் 28, 2018 ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து அக்சு பெர்னாண்டோ சுயநினைவற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (30) உயிரிழந்துள்ளார்.
கிரிக்கெட் சமூகத்தினர் அஞ்சலி
நியூசிலாந்தில் 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக்கிண்ணத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பெர்னாண்டோ விளையாடியுள்ளார்.

லிங்கனில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண அரையிறுதி போட்டியில் சிறந்த ஆட்டக்காரராகவும் திகழ்ந்துள்ளார்.
பம்பலப்பிட்டி புனித பேதுருவானவர் கல்லூரியின் மாணவரான இவர், 13, 15, 17 வயதுகளுக்குட்பட்ட அணிகளின் தலைவராகவும் 19 வயதுக்குட்பட்ட அணியின் உப தலைவராகவும் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் இவரின் மறைவிற்கு கிரிக்கெட் சமூகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.