மோசடி சர்ச்சையில் சிக்கிய இலங்கையின் பிரபல கிரிக்கெட் நட்சத்திரம்
சீகிரிய பிரதேசத்தில் பெறுமதியான காணியை சட்டவிரோதமாக பெற்ற உலக புகழ்பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் எனத் தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த கிரிக்கெட் வீரர் தனது மனைவியின் பெயரில் காணி பெற்றுக் கொண்டுள்ளார். அதற்காக அரச அதிகாரிகள் இருவரின் உதவியும் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த பெண் குறைந்த வருமானம் பெறும் பெண் என அடையாளப்படுத்தி காணி பெற முயற்சித்துள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த காணி கொள்வனவு செய்தமை தொடர்பில் நேற்று முன்தினம் மாத்தறை மாவட்ட இணைப்பு குழு கூட்டத்தில் தகவல் வெளியாகியுள்ளதனை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, அதிகாரிகளுக்கு வழங்கிய ஆலோசனைகளுக்கமைய கிரிக்கெட் வீரரினால் கொள்வனவு செய்யப்பட்ட காணி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை மேற்கொண்டு காணிக்காக உறுதி பத்திரத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி நடவடிக்கைக்கு உதவிய கிராம சேவரின் பிள்ளையை கண்டியில் உள்ள பிரபல பாடசாலைக்கு சேர்ப்பதற்காக இந்த கிரிக்கெட் வீரர் உதவியுள்ளார் என குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான ஆரம்ப விசாரணைகளின் பின்னர், குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம சேவகர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
