சா்வதேச சாதனை ஒன்றினால் இலங்கையை பெருமைப்படுத்திய கிரிக்கட் வீரர்
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் காலியில் நடைபெற்று வரும் டெஸ்ட் ஆட்டத்தின் போட்டி நடுவராக பணியாற்றுவதன் மூலம் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவா் ரஞ்சன் மடுல்கல்ல, சா்வதேச ரீதியில் 200 டெஸ்ட் போட்டிகளில், போட்டி நடுவராக பணியாற்றும் முதல் போட்டி நடுவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ரஞ்சன் மடுல்கல்ல தனது 200வது டெஸ்ட் போட்டியில் நடுவராக செயற்படுகிறார் என்று ஸ்ரீலங்கா கிாிக்கட் அறிவித்துள்ளது.
200 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றும் முதல் போட்டி நடுவர் என்ற பெருமையை பெற்ற ரஞ்சன் மடுல்கல்லவுக்கு சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதேவேளை மடுல்கல்ல, 200 ஆண்களுக்கான டெஸ்ட் போட்டிகள், 369 ஆண்களுக்கான ஒருநாள் மற்றும் ஆண்களுக்கான 125, 20க்கு 20 போட்டிகளில் நடுவராக இருந்ததைத் தவிர, பெண்களுக்கான 14 ஒருநாள் போட்டிகள் மற்றும் பெண்களுக்கான 8, 20க்கு 20 போட்டிகளையும் மடுல்கல்ல மேற்பார்வையிட்டுள்ளார்.
ரஞ்சன் மடுல்கல்ல 1993 இல் சா்வதேச கிாிக்கட் சம்மேளனத்தினால் போட்டி நடுவராக நியமிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியே அவர் போட்டி நடுவராக பணியாற்றிய முதலாவது போட்டியாக அமைந்திருந்தது.
இந்தநிலையில் அனைத்து முக்கிய சா்வதேச கிாிக்கட் சம்மேளனத்தின் போட்டிகளிலும் தவறாமல், நான்கு சா்வதேச கிாிக்கட் சம்மேளனத்தின் ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டிகள் (1999, 2003, 2015 மற்றும் 2019), மூன்று சா்வதேச கிாிக்கட் சம்மேளன செம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டிகள் (2004, 2006 மற்றும் 2013) 4 சா்வதேச கிாிக்கட் சம்மேளனத்தின் ஆண்கள் 20க்கு 20 போட்டி நடுவராக பணியாற்றியுள்ளார்.
அத்துடன் உலகக் கிண்ண இறுதிப் போட்டிகள் (2007, 2010, 2016 மற்றும் 2021) ஆகியவற்றிலும் ரஞ்சன் மடுல்கல்ல போட்டி நடுவராக செயற்பட்டுள்ளார்.







விமானங்களில் இருந்து தப்பித்து எதிரிப் பகுதிக்குள் விழும் விமானிகள் ஏன் தாக்கப்படுவதில்லை? News Lankasri
