நிதி நெருக்கடி குறித்த சமூக ஊடக செய்திகளை நிராகரித்துள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட்
நிதி நெருக்கடி குறித்த சமூக ஊடக செய்திகளை நிராகரித்துள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட், அவை "ஆதாரமற்றவை மற்றும் தவறாக வழிநடத்தல்" என்று கூறியுள்ளது.
இது குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் விடுத்துள்ள அறிக்கையொன்றில் அதன் வலுவான நிதி நிலையை உறுதிப்படுத்தியுள்ளதுடன், சுமூகமான செயல்பாடுகளையும் மூலோபாய திட்டமிடலையும் செயல்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்
கிரிக்கெட் நிறுவனம் தற்போது இந்தியாவுடன் இணைந்து ஆடவர் இருபதுக்கு20 உலகக் கிண்ணத்தை அடுத்த ஆண்டில் நடத்தவும், இந்த ஆண்டில் மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் 11 போட்டிகளை நடத்தவும் தயாராகி வருகிறது.
நீண்டகால நிலைத்தன்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக முக்கிய மைதான மேம்பாடுகள் மற்றும் புதிய சூரிய சக்தி முயற்சியையும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையிலும் உலகளவிலும் கிரிக்கெட்டின் வெளிப்படைத்தன்மை, நிலைத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்கான அதன் உறுதிப்பாட்டை ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
