சடலங்களை தகனம், அடக்கம் செய்வதா என்பது தேசியப் பிரச்சினையல்ல! சாகர காரியவசம்
கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்வதா அல்லது அடக்கம் செய்வதா என்பது நாட்டின் தேசியப் பிரச்சினை கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
கொவிட் சடலங்களை தகனம் செய்வதா? அடக்கம் செய்வதா? என்ற விவகாரத்தை அரசியல்மயப்படுத்தக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நாட்டின் சுகாதாரப் பிரிவினர் தீர்மானம் எடுத்து அதனை அமுல்படுத்த வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் அரசியல் ரீதியாக எவ்வித தீர்மானமும் எடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்று ஏற்படுவதனை தடுப்பது, கொவிட்டினால் மரணிப்போரை காப்பாற்றுவது எவ்வாறு என்பது பற்றியே நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை அபிவிருத்திப்பாதைக்கு இட்டுச் செல்லும் நோக்கில் அரசாங்கம் முனைப்புக்களை மேற்கொண்டு வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam