வெளிநாடொன்றில் கோர சம்பவம்.. கிட்டத்தட்ட 200 பேருடன் விபத்துக்குள்ளான தொடருந்து
தாய்லாந்தில் தொடருந்து ஒன்றின் மீது கட்டுமான கிரேன் விழுந்ததில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்துடன் 55 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
சம்பவம் நடந்த நேரத்தில் 195 பயணிகளை ஏற்றிச் சென்ற தொடருந்து, பேங்கொக்கிலிருந்து புறப்பட்டு நாட்டின் வடகிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளது.
22 பேர் பலி
இன்று காலை 10 மணியளவில் அதிவேக, தொழில்நுட்பம் கொண்ட தொடருந்து பாதையை அமைக்கப் பயன்படுத்தப்படும் கட்டுமான கிரேன் ஒன்று குறித்த தொடருந்து பெட்டிகள் மீது விழுந்துள்ளது.

இந்த விபத்தின் விளைவாக தொடருந்து தடம் புரண்டு தீப்பிடித்ததாக உள்ளூர் அதிகாரிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
BREAKING: Tragic accident in Thailand: At least 22 dead and 55 injured after a high-speed rail construction crane collapsed onto Train No. 21 traveling from Bangkok to Ubon Ratchathani, between Nong Nam Khuean and Si Khio stations. There were 190 passengers on board. pic.twitter.com/OBrvp7M6WS
— Weather Monitor (@WeatherMonitors) January 14, 2026
தொடர்ந்து, தீ அணைக்கப்பட்ட போதிலும் விபத்தின் விளைவாக 22 பேர் கொல்லப்பட்டதாக மீட்புப் பணியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.