ஆளும் கட்சிக்குள் ஏற்பட்ட விரிசல்! ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் ஆளும் கட்சியின் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பு சாதகமான குறிப்புடன் முடிவடைந்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த கலந்துரையாடலில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவித்துரு ஹெல உருமய தலைவர் உதய கம்மன்பில, அதுரலியே ரத்தன தேரர் மற்றும் அரசாங்கத்தில் இணைந்துள்ள பல கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும், ஆளும் தரப்பில் உள்ள கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான உறவில் பல காரணங்களால் சமீப காலங்களில் விரிசல் ஏற்பட்டன.
கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் வீரவன்ச, கலந்துரையாடலில் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்ட ஒரு சாதகமான குறிப்புடன் முடிந்ததாக கூறியுள்ளார்.
கலந்துரையாடலின் போது, நிர்வாகியின் கடமைகள் மற்றும் செயல்பாடுகளில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் அரசியலில் தீவிரமாக ஈடுபடுமாறு ஜனாதிபதியைக் கோரியதாகக் தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச அண்மையில் கருத்தொன்றை முன்வைத்திருந்தார்.
இது ஆளும் தரப்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த பின்னணியிலேயே நேற்றைய சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பசில் ராஜபக்சவின் செல்வாக்கை சமநிலைப்படுத்தும் முயற்சி என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 13 மணி நேரம் முன்

அண்ணா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam

நெருக்கமானவர் உடன் Vacation சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. புகைப்படங்கள் இதோ Cineulagam
