கோவிட் தொற்றை குணப்படுத்தும் புதிய மாத்திரை மருந்து கண்டுப்பிடிப்பு
கோவிட் வைரஸ் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை அரைவாசியாக குறைக்கக்கூடிய புதிய மருந்து மாத்திரை ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மோல்னுபிராவீர் என பெயரிடப்பட்டுள்ள இந்த மாத்திரையில் இரண்டு மாத்திரைகள் கோவிட் தொற்றிய நோயாளிகளுக்கு தினமும் இரண்டு வழங்கப்பட்டுள்ளன.
775 பேரை பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் பின்னர், வைத்தியசாலையில் அனுமதிக்கக் கூடிய அளவில் 7.3 பேருக்கே நோய் அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே பல நாடுகள் இந்த மாத்திரை பயன்படுத்துவதற்கான விண்ணப்பங்களை செய்துள்ளதாக மருந்து உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபைசர் நிறுவனம் உட்பட சில நிறுவனங்கள் ஏற்கனவே கோவிட் மாத்திரைகளை தயாரிக்க ஆரம்பித்துள்ளன.
எனினும் இதுவரை வெற்றிகரமான பிரதிபலன்கள் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.