இலங்கையில் கோவிட் தொற்றால் 9 நாட்களில் 123 பேர் உயிரிழப்பு
இலங்கையில் கடந்த மே முதலாம் திகதி முதல் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 17 ஆயிரத்து 558 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்றியுள்ளது.
அத்துடன், 9 நாட்களுக்குள் கோவிட் தொற்றால் 123 பேர் உயிரிழந்துள்ளனர். மே முதலாம் திகதி ஆயிரத்து 699 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியான நிலையில், அன்றைய தினம் 9 கோவிட் மரணங்கள் பதிவாகின.
மே 2ஆம் திகதி நாடாளாவிய ரீதியில் ஆயிரத்து 843 பேருக்கு வைரஸ் பரவியமை கண்டறியப்பட்டது. கோவிட் தொற்றால் அன்றைய தினம் 9 பேர் பலியாகினர். அத்துடன், மே3 ஆம் திகதி ஆயிரத்து 913 கோவிட் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அன்றைய தினம் 13 பேர் உயிரிழந்தனர்.
மே 4ஆம் திகதி ஆயிரத்து 860 பேருக்குத் தொற்று உறுதியானது. அத்துடன் 11 மரணங்கள் பதிவாகின. மே 5ஆம் திகதி ஆயிரத்து 897 பேருக்கு தொற்று உறுதியானது. அன்றைய தினம் 14 மரணங்கள் பதிவாகின.
மே 6ஆம் திகதி ஆயிரத்து 895 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. அன்றைய தினம் 11 மரணங்கள் பதிவாகின. மே 7ஆம் திகதி ஆயிரத்து 889 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியான நிலையில், 19 மரணங்கள் பதிவாகின.
மே 8ஆம் திகதி 22 மரணங்கள் பதிவாகின். ஆயிரத்து 890 பேருக்கு வைரஸ் தொற்றியது.
நேற்று 10ஆம் திகதி 2 ஆயிரத்து 672 பேருக்கு வைரஸ் பரவியது. 15 மரணங்களும்
பதிவாகின.
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam