கோவிட் - 19 தடுப்பூசி யாருக்கெல்லாம் ஏற்றக்கூடாது? - சுகாதார மேம்பாட்டு மையம் பதில்

VACCINE
By Independent Writer Feb 20, 2021 05:29 PM GMT
Report

கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும், 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கும் கோவிட் - 19 வைரஸ் தடுப்பூசி ஏற்றப்படாது என்று சுகாதார அமைச்சின், சுகாதார மேம்பாட்டு மையத்தின் ஊடகப்பிரிவு அதிகாரியான வைத்தியர் தேஷானி ஹேரத் தெரிவித்தார்.

இலங்கையில் பொது மக்களுக்கும் கோவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் பணி இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் எந்தெந்தத் தரப்புக்கு கோவிட் - 19 தடுப்பூசி ஏற்றப்படாது அல்லது அவர்கள் பெற்றுக்கொள்ளக்கூடாது என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு தற்போதைய சூழ்நிலையில் கோவிட் - 19 தடுப்பூசி ஏற்றப்படாது. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் பின்னர் அப்பிரிவினருக்கும் அனுமதி வழங்கப்படலாம்.

அத்துடன், கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படாது. அதேபோல பாலுட்டும் தாயாக இருந்தால் குழந்தை பிறந்து 6 மாதங்கள் வரை தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியாது.

ஏனெனில் இப்பிரிவினர் குறித்தும் இன்னும் ஆய்வு இடம்பெறவில்லை. 6 மாதங்களுக்கு பிறகே தடுப்பூசியை பெறுவதற்கு தகுதி பெறுவர்.அதிகளவு ஒவ்வாமை இருப்பவர்கள் தவிர்த்துக்கொள்வதே நல்லது.

கோவிட் - 19 தடுப்பூசி 2 கட்டங்களாக ஏற்றப்படும். எனவே, முதற்சுற்றில் தடுப்பூசி ஏற்றப்பட்டு,அதனால் அதிகளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அவர் இரண்டாவது டோஸை பெறக்கூடாது.

கோவிட் - 19 வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சை நிலையங்களில் இருப்பவர்கள் தடுப்பூசியை பெறமுடியாது. குணமடைந்து இரு வாரங்களின் பின்னர்பெற்றுக்கொள்ளலாம்.

அதேவேளை, கோவிட் - 19 தடுப்பூசி ஏற்றிக்கொண்டால் சுகாதார ரீதியிலான அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் எனச் சிலர் கருதுகின்றனரே என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த வைத்தியர் தேஷாஹினி ஹேரத்,

"நானும் தடுப்பூசி ஏற்றிக்கொண்டேன். நலமாக இருக்கின்றேன். கோவிட் - 19 தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு சிற்சில உபாதைகள் ஏற்படக்கூடும்.

ஊசி ஏற்றப்படும் இடம் சிவப்பு நிறமாகலாம், அந்த இடத்தில் வலி ஏற்படலாம். சில வேளை சிறு அளவில் காய்ச்சல் ஏற்படக்கூடும். நடுக்கல் ஏற்படலாம். சிலருக்கு உணவு அருந்த முடியாது, வாந்தியும் வரக்கூடும். ஆனால், இரு நாட்களில் இயல்பு நிலைக்கு வந்து விடும்.

எனினும், கோவிட் - 19 தடுப்பூசி ஏற்றிக்கொள்வதற்கு அச்சப்படத்தேவையில்லை. நீங்கள் விரும்பினால் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்.அத்துடன், தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்ற கருத்தும் சிலர் மத்தியில் நிலவுகின்றது.

குறிப்பாக தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் கர்ப்பம் தரிக்க முடியாது என பெண்கள் சிலர் கருதுகின்றனர். கர்ப்பமடைந்தாலும் கரு கலைந்து விடலாம் என சிலர் கருதுகின்றனர். அவ்வாறு எதுவும் இல்லை.

எனவே, சுகாதார தரப்பினரிடம் ஆலோசனை பெற்று, வைத்தியரிடம் பிரச்சினைகளை எடுத்துரைத்த பின்னர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்.எவராவது கர்ப்பம் தரிக்க விரும்பினால் 3 மாதங்களுக்கு முன்னர் தடுப்பூசியைப் பெறுவது சிறந்தது என்றார்.  

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US