மட்டுவிலிலும் கோவிட் -19 தடுப்பூசி போடும் நிகழ்வு ஆரம்பம்
நாட்டில் கோவிட் -19 தொற்று அதிகரித்துள்ள நிலையில் கோவிட் -19 தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு நாடு முழுவதுமாக மக்களுக்குத் தடுப்பூசி போடும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு பிரதேசங்களிலும் தடுப்பூசி போடும் நிகழ்வு நடைபெறுகின்றது.
அதனடிப்படையில் இன்றைய தினம் சாவகச்சேரி மட்டுவில் பிரதேசத்தில் J/309 மற்றும் J/316 கிராமசேவகர் பகுதிகளுக்குட்பட்ட 30 வயதிற்கு மேற்பட்டாருக்கான தடுப்பூசி போடும் நடவடிக்கை, யா/மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாலயத்தில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மட்டுவில் பிரதேச மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போடுவதற்கு வருகை தருவதனை
அவதானிக்க முடிகிறது.

