இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்று விகிதம் அதிகரிப்பு - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இந்தியாவில் பதிவாகி வரும் கோவிட் வைரஸ் தொற்று விகிதத்தை விட இலங்கையின் வைரஸ் தொற்று விகிதம் அதிகமாக உள்ளது என பொது சுகாதார பரிசோதகர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
சும்மேளனத்தின் செயலாளர் எம்.பாலசூரியா இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஒரு நாளைக்கு 1900 க்கும் மேற்பட்ட கோவிட் தொற்றுக்கள் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில்,இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 200,000 முதல் 300,000 வரை கோவிட் தொற்றுக்கள் பதிவாகி வருகின்றன.
எனினும் இரண்டு நாடுகளின் மக்கள் தொகையில் நாளொன்றுக்கு 10 லட்சம் மக்களை கருத்தில் கொள்ளும் போது இந்தியாவை விட கோவிட் தொற்று இலங்கையில் அதிகரித்து வருவதாக பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.
நாள் தோறும் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் கண்டறியப்படுவதைக் கையாள மருத்துவமனைகளில் படுக்கை திறன் போதுமானதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே வைரஸ் மேலும் பரவுவதைக் குறைக்க சுகாதார அதிகாரிகள் இந்த விடயத்தை ஆராய
வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
