இலங்கை கிரிக்கட் வீரர்களுக்கு கோவிட் தடுப்பூசி
இலங்கை கிரிக்கட் வீரர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. இலங்கை தேசிய அணியில் அங்கம் வகிக்கும் வீரர்களுக்கு கோவிட் வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் மருந்தளவு கொழும்பில் வழங்கப்பட உள்ளதாவும், இரண்டாம் மருந்தளவு இன்னும் இரண்டு மாதங்களில் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
டெஸ்ட் மற்றும் வரையறுக்கப்பட்ட ஓவர் போட்டிகளில் விளையாடி வரும் தேசிய வீரர்கள் மட்டுமன்றி பயிற்றுவிப்பு குழுவின் உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட அஸ்ரா செனகா தடுப்பூசியே வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இலங்கை தேசிய அணி வீரர்கள் மேற்கிந்திய தீவுகளுக்கான கிரிக்கட் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ள நிலையில் எதிர்வரும் 21ம் திகதி பங்களாதேஷிற்கு எதிரான போட்டி ஆரம்பமாக உள்ளது.
எதிர்வரும் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.





அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
