தடுப்பூசி செலுத்துவதில் அரசியல்வாதிகளின் அழுத்தம் - வேலைத்திட்டத்தில் இருந்து விலக தயாராகும் மருத்துவர்கள் உட்பட சுகாதார ஊழியர்கள்
கோவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, சில பிரதேச அரசியல்வாதிகள் பல்வேறு அழுத்தங்களை கொடுத்து வருவதாக காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனால், இந்த அழுத்தங்களை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக அந்த மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கே.எச்.ஜீ.ஜீவரத்ன தெரிவித்துள்ளார்.
கோவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்திற்கு பிரதேச அரசியல்வாதிகளால் ஏற்படுத்தப்படும் அழுத்தங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலைமையானது இப்படியே தொடர்ந்தால், மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட சுகாதார ஊழியர்கள், கோவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தில் இருந்து விலகி தயாராகி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam