இலங்கையில் தடுப்பூசி செலுத்தாதோருக்கு சட்ட சிக்கல்: சுகாதார அமைச்சர் அறிவிப்பு(VIDEO)
கோவிட்டிற்கு எதிரான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல முடியாது என்பதை சட்டத்தின் அடிப்படையில் செயற்படுத்த முடியும் என்று சட்டமா அதிபர் தொிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
கோவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல முடியாது என்பது தொடர்பில் சட்டத்தின் விளக்கத்தை தாம் சட்டமா அதிபரிடம் கோரியிருந்ததாக அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
தமது இந்த கோரிக்கைக்கு இன்று சட்டமா அதிபரிடம் இருந்து பதில் கிடைத்துள்ளதாகவும், அதன்படி தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், பொது இடங்களில் நடமாடுவதை தடுக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் எவரும் நீதிமன்றத்துக்கு சென்றால் அதனை சவாலுக்கு உட்படுத்த அரசாங்கம் தயார் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 20 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
