வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு கோவிட் தடுப்பூசி
இலங்கையில், வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு கோவிட் - 19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ராப் ஹய்டாரி, தான் இன்று கோவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்டதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Joined Education Minister G. L. Peiris and my friend High Commissioner Gopal Baglay to get our #Covishield shots today. Our thanks to the Sri Lankan Government for offering the #COVID19 vaccine to diplomats, and to India's #VaccineMaitri for making it possible. Great partnership! pic.twitter.com/ROZVUGl39V
— Ambassador M. Ashraf Haidari (@MAshrafHaidari) February 22, 2021
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் இன்றைய தினம் தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ளார்.
இதேவேளை சுகாதார முன்னரங்கப் பணியாளர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிக ஆபத்தான வலயங்களைச் சேர்ந்த மக்கள் என பல்வேறு தரப்பினருக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




