திருக்கோவில் பிரதேசத்தில் கோவிட் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு
திருக்கோவில் பிரதேச ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கோவிட் தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையமானது உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி கு.சுகுணனினால் இன்றையதினம் குறித்த நிலையம் உத்தியோகப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சை நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
மேலும் குறித்த நிகழ்வானது திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி ஏ.பீ.மசூத் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர், திருக்கோயில் வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி மசூத், திருக்கோவில் பிரதேச பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி பி.மோகனகாந்தன், கல்முனை பிராந்திய சுகாதார திட்டமிடல் பணிப்பாளர் வைத்தியர் மாகீர்த் மற்றும் வைத்தியசாலை உத்தியோத்தர்கள் வைத்தியசாலை நிர்வாகத்தினர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.




