திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் 11 பொலிஸாருக்கு கோவிட் தொற்று
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 38 பொலிஸாருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 11 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பொலிஸ் நிலையம் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருக்கோவில் பிரதேச வைத்திய அதிகாரியின் வழிகாட்டலில் சுகாதார உத்தியோகத்தர்கள் இன்று திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 38 பொலிஸாருக்கு அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டதில் 11 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த கோவிட் தொற்றாளர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தற்காலிகமாக பொலிஸ் நிலையத்தைப் பூட்டி
கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தை மீண்டும் திறப்பதற்கான
நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.