இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள கொவிட் மாத்திரைகள்
கொவிட் தொற்றை கட்டுப்படுத்த உலகின் பல பகுதிகளில் பயன்படுத்தப்படும் molnupiravir என்ற மருந்தை இலங்கையில் பயன்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.
இந்த மருந்தை இலங்கை மக்களுக்கு வழங்குவது தொடர்பில் விரையில் ஆராயப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்னா ஜெயசுமன (Channa Jayasumana ) தெரிவித்துள்ளார்.
அதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்குமாறு சுகாதார பரிசோதகர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மர்க் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இந்த மருந்தை பயன்படுத்துவதற்கு உலகின் பல நாடுகளின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதனை இலங்கையில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என விசேட குழுவினர் கருத்தை பெற்று அறிவிக்குமாறு சுகாதார பரிசோதகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam