இலங்கையில் பரவும் பிரித்தானிய கோவிட் மாறுபாடு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் பரவுகின்ற கோவிட் -19 வைரஸின் மாறுபாடு இங்கிலாந்தின் கென்ட் ( Kent) பகுதியில் காணப்படும் கோவிட் வைரஸின் புதிய மாறுபாடுக்கு ஒத்ததாக காணப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் பரவி வரும் கோவிட் - 19 வைரஸ் தீவிரமானது எனவும், நுரையீரலில் கடுமையான தொற்று ஏற்பட்ட பின்னர் அறிகுறிகள் தென்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இந்த புதிய வைரஸின் பண்புகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை, இது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில், மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
முடிந்தவரை தங்கள் பயணங்களை மட்டுப்படுத்த வேண்டும். பெரிய கூட்டங்களை ஒன்றுகூட அனுமதிக்கக் கூடாது எனவும், அடுத்த சில நாட்கள் முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும், வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை உரிய வகையில் பின்பற்றுவதனூடாக வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பை பெற முடியும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன சுட்டிக்காட்டினார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 12 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
