வவுனியாவில் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவர் உயிரிழப்பு
வவுனியாவில் மேலும் 44 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று காலை வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் மேலும் 44 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
வவுனியாவில் நேற்றைய தினம் இருவர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதியாகிருந்தது.
இதனை தொடர்ந்து அவர் வைத்தியசாலையின் கோவிட் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை மற்றைய நபரிடம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிகள் பெறப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர் சாதாரண விடுதி ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
அவரது பரிசோதனை முடிவுகளில் கோவிட் தொற்று பீடித்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.