வவுனியாவில் சிகையலங்கரிப்பு நிலையத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு கோவிட் தொற்று
வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் உள்ள சிகையலங்கார நிலையத்தை சேர்ந்த மூவர் உள்ளிட்ட10 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் ஆகியோரின் முடிவுகள் இரவு நேற்று இரவு வெளியாகின.
அதில், காத்தார் சின்னக்குளம் பகுதியில் நான்கு பேருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த மூன்று பேருக்கும், கோமரசன்குளம் பகுதியில் ஒருவருக்கும், கணேசபுரம் பகுதியில் ஒருவருக்கும், சுந்தரபுரம் பகுதியில் ஒருவருக்கும் என 10 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
