டெல்டா திரிபு நாடு முழுவதும் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை
கோவிட் பெருந்தொற்றின் ஆபத்தான திரிபுகளில் ஒன்றான டெல்டா திரிபு நாடு முழுவதிலும் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நாடு முழுவதிலும் இந்த திரிபு பரவியிருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் இந்த திரிபு பரவியிருக்கலாம் எனவும் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் பயணத்தடை அறிவிக்கப்பட்ட போதிலும் மக்கள் நடமாட்டம் காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
டெல்டா திரிபு நோய் தொற்று பரவியவர்கள் ஊடாக சமூகத்தில் பலருக்கு தொற்று பரவியிருக்கக் கூடிய சாத்தியங்களை மறுப்பதற்கில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே சமூகத்தில் இந்த நோய்த் தொற்று பரவுகை ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
