இலங்கையின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலில்
கோவிட் தொற்று காரணமாக இலங்கையின் பல பகுதிகள் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை இன்றைய தினமும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, 5 மாவட்டங்களைச் சேர்ந்த 16 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, கம்பஹா மாவட்டத்தின் எட்டிகஹேகல்ல மேற்கு, கே.சி சில்வா கிராம சேவகர் பிரிவு, கதிரான வடக்கு அட்டபாகஹவத்த கிராமம், கதிரான தெற்கு பேசகர்ம கிராமம், சேதவத்த மஹா பமுணுகம பிரதேசம், குஞ்சகஹவத்த கிராசேவகர் பிரிவின் 44 ஆவது ஒழுங்கை மற்றும் நில்சிறி கிராம சேவகர் பிரிவின் 3ஆம், 7ஆம் ஒழுங்கைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தின் நவமடகம கி.சே பிரிவின் நவமடகம பிரதேசம், பக்மீதெனியள கி.சே பிரிவின் ரன்ஹெலகம பிரதேசம் மற்றும் சேருபிட்டிய கி.சே பிரிவின் சேருபிட்டிய உப பிரதேசம் என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தின் பலன்னொருவ, கோரளைம, கும்புக்க மேற்கு,மற்றும் நாரதங்கல ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் அங்கமன கிராசேவகர் பிரிவும் மொனராகலை மாவட்டத்தின் போபிட்டிய கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam