இலங்கையில் இரு வாரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா? வெளியான தகவல்
அடுத்து வரும் இரண்டு வாரங்கள் மிகவும் தீர்மானம் மிக்கவை என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன (Dr. Asela Gunawardena) தெரிவித்துள்ளார்.
அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டின் கோவிட் நிலைமைகளை கவனத்திற் கொண்டு பயணக் கட்டுப்பாடுகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊரடங்கு தளர்வுடன் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை மக்கள் முழு அளவில் பின்பற்ற வேண்டியது அவசியமானது.
நாளாந்த கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை 4000 - 5000ஆக காணப்பட்டதுடன் தற்பொழுது அந்த எண்ணிக்கை ஆயிரமாக குறைவடைந்துள்ளது.
அத்துடன், நாளாந்த மரண எண்ணிக்கையும் 50 - 60ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. தேவை ஏற்பட்டால் தற்பொழுது உள்ள கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், நாடு முழுவதிலும் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருவதாகவும், எந்த வகை தடுப்பூசி என்பதனை கருத்திற் கொள்ளாது கிடைக்கும் தடுப்பூசியை மக்கள் ஏற்றிக் கொள்ள வேண்டுமெனவும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam
