ஆராய்ந்து எடுக்கப்பட்ட தீர்மானம் நேற்று முதல் அமுல் - இராணுவத் தளபதி
ஜனாதிபதியின் அறிவிப்பின் படி 20 தொடக்கம் 30 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்குவதா அல்லது 20 முதல் 30 வயதானோருக்குத் தடுப்பூசி செலுத்துவதா என்பதில் எது முக்கியமானது என்பது குறித்து ஆராயப்பட்டதில் ஜனாதிபதியின் அறிவிப்பின்படி, 20 - 30 வயதானோருக்குத் தடுப்பூசி செலுத்தும் திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
20 - 30 வயதான பிரிவினர் 8 இலட்சம் பேருக்கு ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றுவோர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிபவர்களும் அடங்குவர்.
அத்துடன் அடுத்த வாரம் மேலும் 8 மில்லியன் கோவிட் தடுப்பூசி நாட்டை வந்தடையும் என குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
கோவிட் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையைத் தம்மால் உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாது என கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தொற்றாளர்களின் எண்ணிக்கையை மறைக்கும் நோக்கும் தமக்குக் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகமொன்றுக்கு பிரத்தியேகமாக கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைக் கோவிட் தொற்று தாக்கினால் அவர்கள் தொற்றிலிருந்து தப்புவது கடினம்.
நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுமே கோவிட் தொற்றினால் அதிகம் உயிரிழக்கின்றனர்.
என்ற போதும், சகல தரப்பினரும் தடுப்பூசிகளைப் பெற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
செய்தி - ராகேஷ்
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan