தொடர்ந்தும் எச்சரிக்கை - நாட்டு மக்களுக்கு மிக முக்கிய அறிவுறுத்தல்
கிடைக்கும் தடுப்பூசியை விரைவாக பெற்றுக் கொண்டு மக்கள் தங்களது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
புதிய வைரஸ் திரிபுகளினால் நாட்டுக்கு பிரச்சினை ஏற்படாவிட்டால் அக்டோபர் மாத இறுதியளவில் குறிப்பிடத்தக்க அளவு கோவிட் மரணங்கள் குறைவடையும் சாத்தியம் இருக்கின்றது.
அதற்காக கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை மேலும் துரிதப்படுத்த வேண்டும். கோவிட் வைரஸின் புதிய திரிபுகள் ஏற்படுவது தொடர்பில் நாங்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றோம்.
வைரஸ் தொற்று தீவிரமாக பரவும் நிலையில் உலகில் பெரும்பான்மையான மக்கள் கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளும் வரைக்கும் புதிய திரிபுகள் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே கிடைக்கும் தடுப்பூசியை விரைவாக பெற்றுக்கொண்டு, மக்கள் தங்களது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.
அதன் மூலமே நாட்டில் இலகுவான நிலைமையை ஏற்படுத்துவதற்கு முடியுமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
Ethirneechal: சொத்துக்காக அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட சண்டை... ஜனனியிடம் சேர்ந்த ஹோட்டல் வண்டி Manithan
பிக் பாஸ் வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கும் போட்டியாளரின் பெற்றோர்! இந்த வாரம் வெளியேறுவது யார்? Manithan