பொது முடக்கமா? அல்லது தனிமைப்படுத்தல் ஊரடங்கா?
எவ்வாறெனினும், இலங்கையில் இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்க தரப்பிலிருந்து வெளிவரும் அறிவிப்புக்களில் தொடர்ச்சியாக பொது முடக்கம் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு போன்ற சொற்கள் மாறி மாறி பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு ஒரே விடயம் குறித்து அறிவிக்கும் போது வெவ்வேறு சொற்களை பயன்படுத்தி விடுக்கப்படும் அறிவிப்புகளினால் மக்கள் குழப்பமடையும் சாத்தியம் காணப்படுகின்ற அதேவேளை, அரசாங்கத்திற்குள்ளேயே சரியான புரிந்துணர்வு இல்லை என்பதை இது காட்டுவதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இந்த முடக்கத்தின் போது அத்தியாவசிய சேவைகள், குறிப்பாக மருந்து உற்பத்தி மற்றும் விநியோகம், விவசாயம், ஆடைக் கைத்தொழில் ஆகியவற்றை எவ்வித இடையூறுமின்றி முன்னெடுக்க முடியும் என இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார் கோவிட் தீவிரம் காரணமாக கடந்த மே மாதளமளவில் நாட்டில் இறுக்கமான பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டிருந்தன.
இதற்கமைய, தற்போது குறிப்பிடப்படும் பொது முடக்கம் அல்லது தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் இறுக்கமான பயணக்கட்டுப்பாடுகள் என்ற சொற்றொடர்களுக்கு இடையில் வித்தியாசங்கள் காணப்பட்டாலும், இந்த அறிவித்தல்களுடன் வெளியாகும் கட்டுப்பாடுகள், விதிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களில் எவ்வித வித்தியாசமும் இல்லை என சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri