நாட்டில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்
நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை அமுல்படுத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் நாட்டில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை கடுமையாக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலாம் இணைப்பு
நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் நாட்டை முடக்குவது தொடர்பில் சற்றுமுன் புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்த தீர்மானமும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
கோவிட் - 19 பரவல் செயலணி உட்பட மேலும் சில தரப்பினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் இன்று கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தனர்.
இதனை தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போதுள்ள நிலைமையை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில்
குறித்த கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டது.
இதன்போது வெவ்வேறு நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. அதற்கமைய அடுத்த ஓரிரு தினங்களில் சில தீர்மானங்களில் மாற்றங்கள் ஏற்படும்.
முழுமையாக நாட்டை முடக்க எதிர்பார்க்கவில்லை.
போக்குவரத்து கட்டுப்பாடுகளில் ஏதேனுமொரு வகையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி...
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது முக்கிய கூட்டம்

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
