அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது முக்கிய கூட்டம்
இலங்கையில் தற்போது நிலவும் கோவிட் தொற்று அச்சுறுத்தல் தொடர்பான விசேட கூட்டம் ஆரம்பமாகியுள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கோவிட் தடுப்பு செயலணியுடான குறித்த கூட்டம் இன்று முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் கோவிட் அச்சுறுத்தலானது ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படும் தற்போதைய சந்தர்ப்பத்தில் நாட்டில் முடக்கத்தையோ அல்லது கடுமையான பயணக்கட்டுப்பாடுகளையோ அமுல்படுத்துமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் இடம்பெற்று வரும் குறித்த கூட்டத்தில் இந்த கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான தீர்மானம் எட்டப்படலாம் என கூறப்படுகிறது.





பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
