டெல்டா வைரஸ் இலங்கையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை
டெல்டா வகை கோவிட் வைரஸானது எதிர்வரும் சில வாரங்களில் இலங்கையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைரஸ் தொடர்பான உலக முன்னணி பேராசிரியரான மலிக் பீரிஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தேசிய விஞ்ஞான அறக்கட்டளை நிகழ்வொன்றில் இணைய வழியினூடாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
புதிய டெல்டா வகை கோவிட் வைரஸ் இந்தியாவில் பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் சில வாரங்களில் அது இலங்கையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
பொது சுகாதார நிபுணராக நான் இவ்வாறு எச்சரிக்கை விடுக்காவிட்டால், நான் எனது பொறுப்பை தட்டிக்கழித்ததாக ஆகிவிடும்.
அதனால் இந்த புதிய வகை வீரியம் கூடிய டெல்டா வைரஸுக்கு எதிராக குறிப்பிடத்தக்க எதிர் தாக்குதலை மேற்கொள்ள தடுப்பூசி இரண்டு கட்டங்களையும் ஏற்றிக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 47 நிமிடங்கள் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
