மன்னாரில் மேலும் 17 கோவிட் தொற்றாளர்கள் - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
மன்னார் மாவட்டத்தில் மேலும் 17 கோவிட் தொற்றாளர்கள் நேற்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னாரில் தற்போது வரை 976 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர். பரிசோதனைகளின் போது மேலும் 17 பேருக்கு கோவிட் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம் மாதம் முதலாம் திகதி தொடக்கம் தற்போது வரை 167 பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்தில் மொத்தம் 959 தொற்றாளர்களும், தற்போது வரை மொத்தம் 976 தொற்றாளர்களும் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் தற்போது வரை 2341 பீ.சி.ஆர். பரிசோதனைகளும், தற்போது வரை மொத்தமாக 24617 பீ.சி.ஆர். பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
