யாழில் கோவிட்டிற்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் மறுநாள் உயிரிழப்பு
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வசிக்கும் ஒருவருக்குக் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 10 நாள்கள் சிகிச்சையளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் குணமடைந்ததாக கூறி நேற்றுமுன்தினம் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அவர் வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த வேளை நேற்று திடீரென உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கைதடி முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 85 வயதுடைய பெண் சாவகச்சேரி வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
அவருக்கும் கோவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.





அக்டோபர் 12 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்படும் மாற்றம்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை News Lankasri
