மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத பலர் கைது
மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் முகக்கவசம் அணியாதோர், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் உள்ளிட்டோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சுதத் மாரசிங்க தலைமையில் மட்டக்களப்பு நகர பகுதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது மட்டகளப்பு நகர்ப்பகுதியில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதோர் பலர் கைது செய்யப்பட்டு அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள், வீதிகளில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் பலர் கைது செய்யப்பட்டு அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் மட்டக்களப்பு நகர்ப் பகுதிகளில் 2 பிரிவாக சென்று பரிசோதனை நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளதுடன் தொற்று நீக்கும் வகையில் கிருமி நாசினி திரவம் விசிறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.










6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 57 நிமிடங்கள் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
